Saturday, April 14, 2012

எழே நாளில் 5 கிலோ எடை குறைக்க

DL AS PDF ABDUL எழே நாளில் 5 கிலோ எடை குறைக்க பிறர் உங்களை குண்டு, உருளைக்கிழங்கு என்று அழைக்கிறார்களா? எடை குறைக்கிறேன் பேர்வழி என்று Gym'க்கு மாதம் 200 ரூ. தண்டம் அழுகிறிர்களா?? இதோ எழே நாளில் 5 கிலோ எடை குறைக்க எளிய வழி. இதனால் எந்த side effect 'உம் கிடையாது. முதல் நாள்: இன்று நீங்கள் காட்டு வாசியாக வாழ வேண்டும். பயப்பட வேண்டாம். இன்று வெறும் பழங்கள் தான் ஆகாரம். ஆனால் வாழை சேர்க்கக்கூடாது. வ்வாழை தவிர வேறு எந்த பழத்தையும் உண்ணலாம். அளவே கிடையாது. நிறைய பழச்சாறும் அருந்தலாம். இதிலும் வாழை கூடாது. தர்பூஷணி மிகவும் நல்லது. தர்பூஷணி மிகவும் நல்லது. இந்த உணவால் ஒரே கஷ்டம் என்னவென்றால், மிகுதி நேரம் கழிப்பரையிலேயே செலவிட நேரிடும். (என்னடா இது??) உடலில் நிறைய நீர் சுரக்கும். அதனால் சிறு நீர் நிறைய போகும். அச்சம் வேண்டாம். இரண்டாம் நாள்: இன்றும் நீங்கள் காட்டுவாசி தான். ஒரே வித்தியாசம். இன்று பழங்களுக்கு பதிலாக காய்களை உண்ண வேண்டும். இதிலும் அளவே கிடையாது. உருளைக்கிழங்கு சேர்க்கலாகாது. நிறைய நீர் அருந்த வேண்டும். முடிந்தால் எல்லா காய்களையும் போட்டு மிளகு தூவி சூப் வைத்து குடிக்கலாம். பழச்சாறும் அருந்தலாம். "டேய், எங்களை எல்லாம் ஒரு வழி பண்ணறதுன்னே முடிவ்வு பண்ணிட்டியா" என்று யாரும் திட்ட வேண்டாம். மூன்றாம் நாள்: இன்றும் நீங்கள் நாட்டுவ்வாசியாக முடியாது. இன்று காய் மற்றும் கானிகளை உண்ண வேண்டும். "வரும் வாரம் காய் கறி வாரம்" என்று நினைக்கிறீர்களா??? இன்றும் வாழை கூடாது. இன்று சூப் மற்றும் பழச்சாற்றை அருந்தலாம். காலை உணவிற்கு ஒரு பெரிய உருளைக்கிழங்கை சற்றே நெய் விட்டு வெந்து உண்ணலாம். "எலேய் அறை படப்போறே" என்று நீங்கள் சொல்வது என் காதில் நன்றாகவே விழுகிறது :) நாங்காம் நாள்: கடந்த 4 நாட்களாக எதை தவிர்த்தோமோ அது தான் இன்று தான் உணவு. ஆம். இன்று வெரும் வாழைப்பழம் தான். எவ்வளவு உண்ண முடிகிறதோ அவ்வளவு உண்ணலாம். எவ்வளவு தான்டா வாழைப்பழம் திங்கறது'ன்னெல்லாம் கேக்கப்படாது. சொன்னா செய்யணும். அது தான் சமத்துப்பையனுக்கு அழகு. இரண்டு கப் பாலும் குடிக்கலாம். ஆனால் சர்க்கரை கூடாது. ஏன் விட்டா மாட்டுக்காம்பிலிருந்து நேரா குடிச்சா இன்னும் நல்லது'ன்னு சொல்லுவே பொலிருக்கு :(( ஐந்தாம் நாள்: இன்று கொழுப்பு சத்து சேர்க்கும் நாள். (ஆமாமாம் கண்டிப்பா தேவை. உன்னை வந்து நாலு சாத்து சாத்தரதுக்கு இது ரொம்ப தேவை). காலை உணவுகு இரண்டு பன்னும் கொஞ்சம் வேக வைத்த பன்னீரும் உண்ணலாம். இதை பர்கர் போல் கொஞ்சம் தக்காளியும் சேர்த்து உண்ணலாம். சுவைக்கு மிளகு பொடியும் உப்பும் சேர்த்துக்கொள்ளலாம். இது தவிர வெரும் தக்காளி தான் இன்று உணவு. நான் சொல்லுவது காய்கறியான தக்காளியை. வேறேதும் அர்த்தம் கொள்ள வேண்டாம். உங்கள் நீர் அளவையும் இரண்டு மடங்காக அதிகறிக்க வேண்டும். (கிழிஞ்சது போ) ஆறாம் நாள்: நேற்று உண்டதை இன்று அளவில்லாமல் உண்ணலாம். நிறைய காய்களும் சேர்க்கலாம். உருளை கூடாது. நிறைய நீர் அருந்த வேண்டும். ஏழாம் நாள்: எப்போடா இந்த நாள் வரும் என்ற எதிர்பார்ப்பு உங்களுள் அதிகறித்து விடும். இன்று கொஞ்சம் சோறும் பழச்சாறும், காய்காளும் உண்ணலாம். ஒரு வேளைக்கு மட்டும் தான் சோறு. மற்ற வேளைகளுக்கு காய்கள் தான். என்ன வேண்டுமானாலும் உண்ணலாம். எண்ணெய் கூடாது. இந்த ஏழு நாட்கள் கழிந்ததும் 5 கிலோ எடை குறைந்திருக்க வேண்டும். இல்லையென்றால், மீண்டுமொரு வாரம் இதை repeat செய்ய வேண்டும். நீங்க repeat செய்யுங்க. நான் appeat ஆகிக்கறேன். Thanks to http://vettivambu.blogspot.com/2005/03/5.html -- A.M.Abdul Malick

No comments: