தக்காளி சூப்
எப்படி இருக்கும்?
தேவையான பொருட்கள்
நன்கு பழுத்த தக்காளி - 5
பெரிய வெங்காயம் - 1
பூண்டு - 6 பல்
சோள மாவு - 1 மேஜைக் கரண்டி
வெண்ணெய் - 2 தேக்கரண்டி
தக்காளி சாஸ் - 2 மேஜைக் கரண்டி
மிளகுத்தூள் - தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு
செய்முறை
1. வெங்காயம், தக்காளி, பூண்டு ஆகியவற்றை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
2. வெண்ணெயை உருக்கி, அதில் பூண்டு சேர்த்து வதக்கவும். பூண்டு வதங்கியதும், வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
3. வெங்காயம் வதங்கியதும், தக்காளி, தேவையான அளவு உப்பு ஆகியவை சேர்த்து வதக்கவும்.
4. தக்காளி பச்சை வாசனை போக வதங்கியபின், 300 மில்லி தண்ணீர் (அல்லது கால் லிட்டர்) தண்ணீர் சேர்க்கவும்.
5. சிறு தீயில் 10 நிமிடம் கொதித்த பிறகு, கரண்டியால் நன்கு மசித்து வடிகட்டிக் கொள்ளவும்.
6. வடிகட்டிய தண்ணீரில் தக்காளி சாஸ் கலந்து, பிறகு அதில் தனியே தண்ணீரில் கரைத்த சோள மாவைச் சேர்க்கவும்.
7. பின்னர் 5 நிமிடம் கொதிக்கவிட்ட இறக்கி வைத்து, மிளகுத்தூள் தூவி பரிமாறவும்.குறிச்சொற்கள்: சமையலறை சமைப்பது சமைத்த குறிப்பு சமைக்க drink tips bear prepare WatermelonJuice Juice Watermelon Junice Fresh Cocoktail Mixed Cocktail Fruit பழ மாம்பழம் ஜூஸ் சமையல் மற்றவை திரைப்படங்கள் வாழ்வு நல பொழுதுபோக்கு செய்தி கல்வி ஜுஸ்செய்யும்முறைபலவகைஜூஸ்சமையல்நியூஇயர்ஸ்பெசல்கிறிஸ்மஸ்ஸ்பெசல் விருந்து உணவுகள்
--
A.M.Abdul Malick
--
A.M.Abdul Malick
1 comment:
பெரிய தலைப்பு
பொறியியல் Shoubra ஆசிரிய
http://www.feng.bu.edu.eg
Post a Comment